டிஸ்லெக்ஸியா என்பது ஒரு கற்றல் குறைபாடு. இது வாசிப்பு, எழுத்து மற்றும் எழுத்துக்கூட்டி வாசிப்பது எழுதுவது ஆகிவற்றைப் பாதிக்கும். இது மரபுவழி வரும் நரம்பியல் பிரச்சனை.
ஒரு எழுத்தைப் பார்க்கும்போது அதனோடு ஒரு ஒலியை பொருத்த முடியாத போதே இந்தப் பிரச்சனை உருவாகின்றது. ஒலியைப் பொருத்த முடியாத போது அந்த எழுத்து கிறுக்கல் போலவும், இடம் மாறுவது போலவும், தலை கீழாக இருப்பது போலவும் அவ்வெழுத்துகள் தோற்றமளிக்கும். இது ஒரு குழப்பத்தையும் மன அழுத்தத்தையும் பிள்ளைகளிடம் உருவாக்கும்.
அடுத்து, ஒலிகள் கற்பிக்கப்பட்டாலும் ஒலிகளை ஒன்றோடு ஒன்று சேர்ப்பது மிகப் பெரிய சவாலாகத் தெரியும். ஒலிகள் சேர்ந்தே ஒரு சொல் உருவாகின்றது என்பது பயிற்றுவிக்கப் பட வேண்டும்.
எழுத்துக்களின் ஒலிகள் தெரியாத நிலையில் எழுத்து பெரும் சவால் ஆகிவிடுகிறது. இந்நிலையில் எழுத்துக்கூட்டி எழுதுவது இயலாமல் போய்விடுகிறது.
ஆகவே, ஒவ்வொரு எழுத்தோடும் ஒரு ஒலியைச் சேர்த்து தனித்தனியாக சொல்லிக் கொடுப்பது இன்றியமையாதது ஆகிவிடுகிறது.
டிஸ்லெக்சியா உடைய பிள்ளகளுக்கு குறுகிய நினைவாற்றல் குன்றி இருக்கும். இதனால், ஒலிகளைச் சொல்லிக் கொடுக்கும்போது ஒவ்வோர் எழுத்துக்கும் / ஒலிக்கும் ஒரு படத்தைக் காட்டி பயிற்றுவிக்க வேண்டும். படம் ஒன்றே அவர்களுக்கு ஆரம்பத்தில் ஒலிக்கான சின்னமாக மூளையில் பதிவாகும்.
டிஸ்லெக்சியா உடைய பிள்ளைகள “மெது பயில்வோர்” என்று அழைப்பது அபத்தம். காரணம் இவர்களுக்குச் சராசரி அறிவோ அல்லது அதற்கும் மேற்பட்ட அறிவுவோ இயல்பாக இருக்கும். மெது பயிவோருக்கு சராசரிக்கும் குறந்த அறிவே இருக்கக் கூடும். இவர்கள் தங்கள் வயதுக்கேற்ற அறிவைப் பெற்றிருக்க மாட்டார்கள். இவர்களுக்கும் ஒலி வழி மட்டுமே கற்பிக்கமுடியும். இவர்களுடை அடைவு நிலை டிஸ்லெக்சியா பிள்ளைகளுடைய அடைவு நிலையைவிட மிகக் குறைவாக இருக்கும்.
டிஸ்லெக்சியா உடையவர்களுக்கு மரபுவழி கற்பிக்கும் முறை எந்தப் பயனையும் அளிக்காது.